வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (17:42 IST)

அகிராவுக்குப் பிறகு சல்மானை இயக்கும் முருகதாஸ்

சோனாக்ஷி சின்கா நடிப்பில், அகிரா இந்திப் படத்தை எடுத்து வருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து அவர் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


 

அகிரா தமிழில் வெளியான மௌனகுரு படத்தின் இந்தி ரீமேக். தமிழில் அருள்நிதி நடித்த வேடத்தில் சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து முருகதாஸ் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்குவதாக பேச்சு இருந்தது. ஆனால், மும்பை செய்திகள் வேறு மாதிரி உள்ளன.

சல்மான் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும், அதுல் அக்னி கோத்ரி படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. சல்மான் தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.