வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. நம்பினால் நம்புங்கள்
  4. »
  5. கட்டுரை
Written By Webdunia

சுடுகாட்டில் எரியும் பிணத்தின் மீது அமர்ந்து பூசை!

webdunia photoWD
இயற்கையையும் கடவுளையும் மகிழ்விக்க ஒரு சிலர் நள்ளிரவு வேளையைத்தான் தேர்வு செய்கின்றனர். இதுபோன்ற விசித்திர பூசைகள் சுடுகாட்டில் நடப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். குடுகுடுப்பைக்காரன் சுடுகாட்டில் பூசை செய்துவிட்டுத்தான் நள்ளிரவில் நல்வாக்கு கூற வருகிறான் என்று கூறப்படுவதுண்டு.

இப்படிப்பட்ட பூசைகள் பற்றி நமக்கு இருக்கும் சந்தேகங்களை அறிய சுடுகாட்டுப் பூசாரி சேவேந்திரனாத் தாதாஜி என்பரை அணுகினோம். இவர் சுடுகாட்டு மந்திரவாதி ஒருவரின் சிஷ்யர்.

மூன்று விதமான வழிபாடு இவர்களால் செய்யப்படுகிறதாம். ஷம்ஷான் சாதனா, சிவ சாதனா, மற்றும் சவ சாதனா. ஆகிய 3 வழிபாட்டு முறைகள் உள்ளதென்ற சேவேந்திரனாத் தாதாஜி, இதில் மிகக் கடினமானது சவ சாதனாவாகும். சவ சாதனா என்பது எரியும் பிணத்தின் மீது வழிபாடு நடத்தப்படுவதாகும். ஆண் பக்தருக்கு பெண் பிணமும், பெண் பக்தைக்கு ஆண் பிணமும் இதற்காக தேர்வுசெய்யப்படும். சடங்கு ரீதியான இந்பூசை செய்தவரின் ஆசையை அந்த பிணம் பூர்த்தி செய்கிறது என்று கூறுகிறார்.

webdunia photoWD
இந்த பூசை நடைபெறும்போது பொது மக்கள் பார்க்க அனுமதி கிடையாது. இப்படிப்பட்ட ரகசிய பூசைகள் பொதுவாக உஜ்ஜைனி நகரின் தாராபீத், காமாக்யா, திரயம்பகேஷ்வரர் மற்றும் சக்ரதீர்த்தா ஆகிய மயானங்களில் மட்டுமே நடைபெறுகிறது.
webdunia photoWD
சிவ சாதனாவும் சவ சாதனாவைப் போன்றதுதான். ஆனால் இதில் பிணத்தின் மீது பக்தர் நின்றுகொண்டு பூசை சடங்குகளை செய்யவேண்டும். அதாவது சிவன் மீது காளி நின்று கொன்றிருப்பதன் புராணக் கதையை அடியொட்டி இந்தப் பூசை நடத்தப்படுவதாக அந்த பூசாரி தெரிவித்தார். இந்த பூசையின் போது பக்தர் இறைச்சியையும், மதுபானத்தையும் இறந்த உடலுக்கு காணிக்கையாகச் செலுத்துவர்.

ஷம்ஷாம் சாதனா என்ற பூசையில் இறந்தவரின் உறவினர்கள் பங்குபெறுவர். ஆனால் இதில் உறவினர்கள் பிணத்தை பூசை செய்யாமல் மயானம் முழுவதையும் கும்பிடுவார்கள்.

உஜ்ஜைனி மயானம் ஒன்றில் சந்தரபால் என்ற பூசாரி நடத்திய சவ சாதனா பூசையை நேரில் காண வாய்ப்பு கிடைத்தது. சில மந்திரங்களை முணுமுணுத்த இந்த பூசாரி நதிக்கரையில் சில மெழுகுவர்த்திகளை கொளுத்தி இறந்தவர் உடலுக்கு சடங்கு செய்தார். பிறகு தனது வழிபாடு பிற ஆவிகளிடமிருந்து மறைவதற்காக விசில் அடித்தார். பிணத்தின் அருகே கோடு ஒன்றை வரைந்து பிணத்தின் மீது நின்று கொண்டு பூசை செய்யத் துவங்கினார்.

webdunia photoWD
அதன் பிறகு பக்தர்களுக்கு இறைச்சி மற்றும் மதுபானத்தை அளித்தார். அந்த மந்திரவாதி அந்த பிணத்தின் மீது நிர்வாணமாக உட்காரும் தருணம் வந்து விட்டதால் அனைவரையும் மயானத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார்.

பல கேள்விகளுடனும் சந்தேகங்களுடனும் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்... ஆனால் இப்படிப்பட்ட பயங்கர பூசைகளில் அடிக்கடி பங்கேற்கும் சிலர் உள்ளனர் என்று கேள்விப்பட்ட போது அச்சமாகவும், வினோதமாகவும் இருந்தது.