வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. நம்பினால் நம்புங்கள்
  4. »
  5. கட்டுரை
Written By Webdunia

கால பைரவரின் சிலை மது அருந்துவதைக் கண்டுள்ளீர்களா?

webdunia photoWD
சிலை ஏதாவது மது அருந்துவதை கண்டுள்ளீர்களா? நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவீர்கள். சிலை எவ்வாறு மது அருந்த முடியும்? சிலை உயிரற்ற ஒன்று, நமது அனுபவத்தைப் பொறுத்தவரை உயிரற்ற எதற்கும் பசியோ, தாகமோ ஏற்படாது என்றுதான் கூறுவோம்... ஆனால், உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்) நகரில் உள்ள கால பைரவர் சிலை இதற்கு விதிவிலக்கு. கால பைரவர் சிலைக்கு பக்தர்கள் மது அளிக்கிறார்கள். அந்த மதுவை அவர்கள் கண்ணெதிரிலேயே அச்சிலை குடிக்கிறது.

நம்பினால் நம்புங்கள் என்பதன் தொடர்ச்சியாக இந்த சிலையின் மர்மம் என்ன என்பதை அறிய புறப்பட்டோம். அதற்காக, கோயில்களின் நகரம் என்றும், மஹாகாளீஸ்வரரின் (சிவபெருமானின் 12 ஜோதி லிங்க திருத்தலங்களில் ஒன்று) நகரம் என்றும கூறப்படும் உஜ்ஜைன் நகருக்குச் சென்றோம்.

மஹாகாளீஸ்வரர் கோயிலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயிலிற்குச் சென்றோம். கோயிலின் பிரதான வாயிலிற்கு அருகே சென்றபோது அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. கோயிலிற்கு வெளியே பூஜைக்காகவும், அர்ச்சனை செய்யவும் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் கடைகளில் பூக்களுடன் மது பாட்டில்களும் விற்கப்படுவதைக் கண்டோம். சில பக்தர்கள் மது பாட்டில்களை வாங்கிச் செல்வதையும் பார்த்தோம்.

webdunia photoWD
இக்கோயிலைப் பற்றிக் கூறப்படும் மர்மம் குறித்து அங்குள்ள கடைக்காரரான ரவிவர்மா என்பவரிடம் விசாரித்தோம். அவர் கூறினார், "பைரவரின் கோயலிற்கு வரும் ஒவ்வொரு பக்தரும் அந்தக் கடவுளிற்கு மதுவை அளிக்கின்றனர். மது நிரப்பப்பட்ட கிண்ணம் பைரவரின் வாயைத் தொட்டதும் அதிலிருந்த மது மறைந்துவிடுகிறது" என்று கூறினார்.

webdunia photoWD
கோயிலிற்குள் நுழைந்தோம், அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் அர்ச்சனைக்காக கொண்டுவரப்படும் பூக்கள், உடைப்பதற்கான தேங்காய் ஆகியவற்றுடன் ஒரு மது பாட்டிலும் அவர்கள் வைத்திருந்த அர்ச்சனைக் கூடையில் இருந்தது.

கோயிலின் கருவறையில் (பைரவரின் சிலை உள்ள இடத்தில்) ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று பைரவர் எப்படி மது குடிக்கிறார் என்பதனைக் காண காத்திருந்தோம். கருவறையின் சூழலே வித்தியாசமாக இருந்தது. அங்கிருந்த பூசாரி கோபால் மகராஜ் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே மது ஊற்றப்பட்ட தட்டு ஒன்றை கால பைரவரின் வாய்க்கு கொண்டு சென்றார்... அவ்வளவுதான்!!!... அந்தத் தட்டில் ஒரு துளி மது கூட மிச்சமிருக்கவில்லை.

webdunia photoWD
இப்படி ஒவ்வொரு பக்தரும் அளிக்கும் மது தட்டில் ஊற்றப்பட்டு சிலையின் வாயில் வைக்கப்படுவதும், தட்டிலிருந்து மது மாயமாவதும்... எங்களின் கண்களுக்கு முன்னாலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த பூசாரி கொடுத்த மதுவை அச்சிலை குடித்துக் கொண்டிருந்தது.

இதுபற்றி ராஜேஷ் சதுர்வேதி என்ற பக்தரிடம் பேசினோம். தான் உஜ்ஜைனில் வசித்து வருவதாகவும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கோயிலிற்கு வருவதாகவும் கூறிய அவர், ஆரம்பத்தில் தனக்குக்கூட இந்த மது எங்கே செல்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்ததாகவும், ஆனால் அதைக் கால பைரவர்தான் குடிக்கின்றார் என்பதை தற்பொழுது முழுமையாக நம்புவதாகவும் கூறினார்.

இந்த கால பைரவர் கோயில் 6,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலை வாம் மார்கி தாந்திரிக (மந்திர சக்திகள் கொண்ட) தலம் என்று கூறுகிறார்கள். இந்த வகைக் கோயில்களில் தசை, மது, பணம் ஆகியன கடவுளிற்கு அளிக்கப்படுகிறது.
webdunia photoWD
புராண காலத்தில் தாந்திரிகள் மட்டுமே இக்கோயிலிற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், பிறகு எல்லோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மர்மத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளது. கணக்கிலடங்கா ஆராய்ச்சிகளும் நடந்துள்ளது. ஆனால், இது எப்படி நிகழ்கிறது என்று விளக்கப்படவேயில்லை.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஒரு வெள்ளைய அதிகாரி இந்த சிலை பற்றிய உண்மையை வெளிக்கொணர முயற்சித்ததாகவும், ஆனால் அவருடைய முயற்சி பூஜ்ஜியத்தில்தான் முடிந்ததாகவும் சிலர் கூறினர்.

அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் நாங்கள் ஆராய்ந்தோம். பலருடனும் விவாதித்தோம். இறுதியில் கால பைரவர் சிலை மது அருந்துவது நிஜம்தான் நாங்களும் நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

webdunia photoWD
இந்த நம்பிக்கையின் துவக்கம் : இப்படிப்பட்ட பாரம்பரியம் எத்தனை பழமையானது என்பது யாருக்கும் தெரியவில்லை. சிறு வயது முதலே தாங்கள் இக்கோயிலிற்கு வருவதாகவும், கால பைரவருக்கு மது அளித்து வருவதாகவும் சில பக்தர்கள் கூறினர். முற்காலத்தில் மதுவுடன் இங்குள்ள பலி பீடத்தில் விலங்குகளும் பலியிடப்பட்டதாகவும், ஆனால் தற்போது மது மட்டுமே அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் உஜ்ஜைன் நகர நிர்வாகமும் கால பைரவருக்கு மது அளிக்கிறது.