பேரரசர் சாலமனின் மசோனிக் லாட்ஜின் ரகசியங்கள்!

webdunia photoWD


மசோனிக் லாட்ஜ் ஏதோ ஒரு தங்கும் இடத்தின் பெயரைப் போல ஒலிக்கும் இந்த பெயர், பல்வேறு ரகசியங்களை தன்னுள் அடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விநோதமான அமைப்பின் பெயர் என்பது தெரியுமா உங்களுக்கு.

நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் மெசோனிக் லாட்ஜ் அமைப்பு இயங்கும் ஒரு கட்டடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகருக்கு அருகில் உள்ள மோவ் என்ற இடத்தில் உள்ள அந்த கட்டடத்தை பயங்கர பங்களா என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இரவு நேரத்தில் அங்கிருந்து அச்சமூட்டும் குரல்களை தாங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியதைக் கேட்டு அவ்விடத்திற்கு செல்லத் துணிந்தோம்.

பேரரசர் சாலமன் உருவாக்கிய மெசோனிக் லாட்ஜ் என்ற இந்த அமைப்பு நமது நாட்டு சமூகத்தில் உள்ள அறிவாளிகளில் இருந்து தலைவர்கள், தனவந்தர்கள், நீதிபதிகள் என்று பலரும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சந்தேகத்தற்குரிய பல நடவடிக்கைகள் இந்தக் கட்டடத்தை ஒரு மர்மமான பகுதியாகவே காட்டுகிறது.

இங்கு பிளாக் மேஜிக் என்று அழைக்கப்படும் தந்திரங்கள் நடப்பதாகவும், இவர்கள் ஆவிகளை வணங்குபவர்கள் என்றும், இறப்பிற்குப் பின் ரகசியங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இவை எதற்கும் ஆதாரம் இல்லை. இந்த அமைப்பின் ரகசியமான செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு முயன்ற நாங்கள், அதன் முதன்மையாளராக உள்ள ஜே.டி. ஹாலிவரை சந்தித்தோம். 22 ஆண்டுகளாக இவர் இவ்வமைப்பின் உறுப்பினராக உள்ளார்.webdunia photoWD
தங்களது அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து மற்ற உறுப்பினர்களுடன் விவாதித்தப் பின்னர் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்று கூறினார்.

எங்களை அவர்களுடைய கட்டடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். நாங்களும் சென்றோம். மக்கள் அச்சமுறும் அந்தக் கட்டடம் ஊரில் இருந்து தள்ளி தனியாக நின்று கொண்டிருந்தது. அதற்குள் சென்ற எங்களை வரவேற்ற ஹாலிவரும், மேசன் ராதா மோகன் மாலவியா, மேசன் மேஜர் பி.எல்.யாதவன், மேசன் கமல் கிஷோர் குப்தா ஆகியோர் இந்த இடத்திற்கு நாங்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று கூறினார்.

கண்ணைத்தான் நாங்கள் வழிபடுவதாக அவர்கள் கூறினர். அங்கு பல பழம் பொருட்கள் காணப்பட்டன. மெசோனிக் உறுப்பினர்களாக இருந்த பலருடைய புகைப்படங்களும் அங்கு மாட்டப்பட்டிருந்தன. அவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே மெசோனிக் கோயிலுக்குச் சென்றோம்.

பேரரசர் சாலமன் இந்தக் கோயிலை நிறுவியதாகக் கூறினார். சாலமனின் தத்துவத்தை விளக்கிடும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைக் கண்டோம். ஆனால் அந்த கோயிலில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்கள் கூறவில்லை.

உங்களிடையே தனித்த சிறப்பானதிறமைகள் இருந்தால் மட்டுமே மெசோனிக் சமூகத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்று பழைய உறுப்பினர்கள் சொன்னது கவனத்திற்கு வருகிறது.

புதிதாக சேரக்கூடிய உறுப்பினர்களை டேக்கோன் என்றும், சிறிது கால பழக்கத்திற்குப் பின் அவரை முத்த டேக்கோன் என்றும், அதன்பிறகு ஜூனியல் வார்டன், பிறகு சீனியர் வார்டன் என்ற தகுதிகளுக்கெல்லாம் உயர்ந்து இறுதியாக மேசன் என்று அழைக்கப்படுவார்.

மசோனிக் சம்பிரதாயங்களில் அவர் தேர்ச்சி பெற்ற பின்னர் அவரை விர்ச்சுவல் மாஸ்டர் என்ற பட்டம் பெற்று சில மேசன்களைக் கொண்ட குழுவை நடத்தும் பொறுப்பு தரப்படுகிறது.

மேசன் ஆக விரும்பும் ஒவ்வொருவரும் மூன்று தகுதிகளை பெற வேண்டும். முதல் தகுதி அவர் உழைப்பாளியாகவும், மிகச் சிறந்த கட்டட வல்லுநராகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் மானுடத்திற்கு சேவை ஆற்ற வேண்டும். (ஏதாவது புரிகிறதா?)

இரண்டாவது தகுதி, மனித வாழ்க்கையை அழகிய கோயிலாக மாற்றும் நல்ல பணியை அவர் கற்றுத் தேற வேண்டும். மூன்றாவதாக மரணமற்ற அமரத்துவம் கற்றுத் தரப்படும். (!)

இறந்த பின் புதைக்கப்பட்ட உடலின் எலும்புகள் அழிந்து விடாமல் இருப்பதற்கான சில வித்தைகளையும் கற்றுத் தருவார்களாம். அதற்கு அவர்கள் பயன்படுத்துவது மண்டை ஓட்டை. இப்படிப்பட்ட செயல்களின் காரணமாகத்தான் மொத்த சமுதாயமும் இவர்களை சந்தேகக் கண் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறது.

வாரத்திற்கு ஒரு முறை இரவில் இவர்கள் சந்தித்துக் கொள்வார்களாம். வெளிச்சத்தில் இவர்களது சந்திப்பு நிகழாது. இருளில்தான் வேலை செய்வார்களாம். தாங்கள் செய்வது எதையும் மற்றவர்களுக்குக் காட்ட மாட்டார்களாம். இதனாலேயே இவர்கள் ஆவிகளுடன் தொடர்பு கொண்டு ஏதேதோ செய்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்.
Webdunia|


இதில் மேலும் படிக்கவும் :