பகவான் புட்டபர்த்தி சாய்பாபா!

webdunia photoWD
லிங்கத்தை வரவழைத்துத் தருவது, தன்னிடம் ஆசி பெறும் பக்தர்களுக்கு விபூதியை வரவழைத்து அளிப்பது என்று பல விந்தைகளை புரியும் புட்டபர்த்தி சாய்பாபாவை உலகின் ஆன்மீகத் தலைவராக ஏற்றுக்கொண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவர் வழி நடக்கின்றனர்.

அவர் நிகழ்த்திய அதிசயங்களைப் பற்றி அவருடைய பக்தர்கள் பலவற்றைக் கூறியுள்ளனர்.

தங்களுக்கு ஏற்பட்ட நோயினால் ஏற்படும் வலியை பாபா ஏற்றுக்கொண்டு நிவாரணம் அளிப்பதாக சில பக்தர்கள் கூறினர். சிலர், தங்களுக்கு உணவு, மோதிரம், நகை, கைக்கடிகாரங்கள் என்று பல பொருட்களை பாபா வரவழைத்துக் கொடுத்ததாகக் கூறுகின்றனர்.

காற்றில் மிதக்கக் கூடியவர், ஒரு இடத்தில் இருந்துகொண்டே மற்றொரு இடத்தில் காட்சி அளிப்பவர், மாயமாய் மறைந்துவிடுபவர், கருங்கலை சுவைக்கும் இனிப்பாக மாற்றுபவர், தண்ணீரை பெட்ரோலாக மாற்றக் கூடியவர், கேட்கும் பொருள் எதுவானாலும் அதனை வரவழைத்துக் கொடுப்பவர் என்றெல்லாம் சாய்பாபாவைப் பற்றி கூறுகின்றனர்.

Webdunia| Last Updated: புதன், 19 பிப்ரவரி 2014 (01:46 IST)
இதுமட்டுமின்றி, தட்பவெப்ப நிலையை மாற்றியுள்ளார், தன்னுள் இருந்து ஒளியை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார் என்றெல்லாம் பாபாவைப் பற்றி பெருமையாக பக்தர்கள் குறிப்பிட்டாலும், அவர் செய்வதெல்லாம் சாதாரண மேஜிக்தான் என்று அவ்வப்போது சில இதழ்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :