நோயை‌த் ‌தீ‌ர்‌க்க த‌ண்‌ணீ‌ர் வை‌த்‌திய‌ம்!

- ‌பீ‌க்கா ச‌ர்மா

webdunia photoWD
இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு தலைநகர் டெல்லியில் வாழ்ந்துவரும் இந்திரா தேவி என்பவரை அறிமுகம் செய்கின்றோம்.

தனக்குள்ள அதிசய சக்தியினால் புற்றுநோய் உள்ளிட்ட எப்படிப்பட்ட நோய்களையும் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறும் இந்திரா தேவி, இந்த சக்தியை தனக்கு இறைவன் அளித்துள்ளதாகக் கூறுகிறார்.

தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு இவர் சிகிச்சை அளிக்கும் விதம் அலாதியானது. நோயாளிகளை அவர்களுடைய இல்லத்தில் இருந்தே தண்ணீரைக் கொண்டுவருமாறு கூறும் இந்திரா தேவி, அந்த நீரை வாங்கி அந்த நோயாளியின் உடலில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது சிறிது தெளிக்கிறார், மீதமுள்ள தண்ணீரை நோயாளியை குடிக்கச் சொல்கின்றார்.

பூக்களும், வாழைப்பழமும் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. ஈரமான பூக்களால் நோயாளியின் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போல தொட்டு எடுக்கின்றார் இந்திரா தேவி.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்திரா தேவியின் சிகிச்சையை நாடி அவர் வீட்டின் வாயிற்படிக்கு வருகின்றனர். இறைவன் தனக்கு அளித்துள்ள விசேட சக்திகளைக் கொண்டு தான் அவர்களை குணப்படுத்தி வருவதாக இந்திரா தேவி கூறுகிறார்.

நோயாளிகளின் வலியையும், துயரத்தையும் தனது கையால் அவர்களைத் தொடுவதன் மூலமே நீக்கிவிட முடியும் என்று இவர் கூறுகிறார்.

webdunia photoWD
எ‌ந்த நோ‌ய்‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்தாலு‌ம் அத‌ற்காக நோயா‌ளி‌யிட‌ம் இரு‌ந்து தா‌ன் எ‌ந்த‌க் க‌ட்டண‌த்தையு‌ம் வசூ‌லி‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்று இ‌ந்‌திரா தே‌வி கூறு‌கிறா‌ர். ஆ‌னா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் நா‌ங்க‌ள் க‌ண்ட கா‌ட்‌சி உ‌ண்மை வேறெ‌ன்பதை உண‌ர்‌த்‌தியது. த‌ன்‌னிட‌ம் வரு‌ம் நோயா‌ளிக‌ள் ரூ.20 முத‌ல் ரூ.50 வரை கா‌ணி‌க்கை செலு‌த்‌தினா‌ல் அதனை த‌ன்னா‌ல் த‌வி‌ர்‌க்க முடியாது எ‌ன்று இ‌ந்‌திரா தே‌வி கூறு‌கிறா‌ர்.

இந்திரா தேவியின் சிகிச்சையினால் தங்களுடைய நோய்க்கு முடிவு ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் இவருடைய சிகிச்சையினால் எவரும் குணமடைந்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆயினும், அவரிடம் இறை சக்தி உள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.

Webdunia|
இப்படிப்பட்ட அதீத சக்தி ஒருவருக்கு இருக்கும் என்று உங்களால் நம்ப முடிகிறதா? அல்லது இவையெல்லாம் மூடப்பழக்கம் என்று கூறுகின்றீர்களா? எங்களுக்கு எழுதுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :