திரிசூலத்தால் அறுவை சிகிச்சை செய்யும் பாபா!

பாலே லால் சர்மா
webdunia photoWD
எல்லா நோய்களையும் தனது திரிசூலத்தைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பாபா ஒருவரின் ரகசியங்களை இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் அந்த பாபாவின் பெயர் பாலே லால் சர்மா. முனிவர் ஒருவரின் ஆன்மா ஒன்று தனக்குள் இறங்குவதாக இவர் கூறிக்கொள்கிறார். அதனை அவருடைய குடும்பத்தார் உட்பட ஒருவரும் நம்பவில்லை.

இந்த பாபா ஆணிகளால் ஆன ஆசனத்தில்தான் உட்காருகிறார் என்று கூறினார்கள். அந்த ஆசனத்தில் அமரும்போது மட்டும் குர்தா பைஜாமிற்கு பதில் ஜீன்ஸ் பேண்டை போட்டுக் கொண்டு வந்து அமர்வதை நாங்கள் கண்டோம். ஆணிகள் அவரை துன்புறுத்தாது என்றால், எதற்காக ஜீன்ஸ் போட வேண்டும்?

webdunia photoWD
ஆடையை மாற்றிக்கொண்ட பிறகு 2 நிமிட நேரம் அந்த பாபா ஏதோ பிரார்த்தனை செய்தார். அப்போது அவரது உடல் நடுங்கியது. அங்கு கூடியிருந்த மக்கள் அவரை கும்பிட்டார்கள். பிறகு பாபா அந்த ஆசனத்தில் அமர்ந்தார். பல பக்தர்கள் அவரிடம் மலர்களை அளித்து மரியாதை செய்தனர். அப்பொழுது எங்களது புகைப்படக் கருவியைப் பார்த்து பாபா பேசினார்.

தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் பாபாவிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்.

Webdunia|
எலுமிச்சைப் பழத்தில் சில கோதுமைகள் இருப்பதை தான் கண்டுபிடித்தால்தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று பாபா கூறுகிறார். அவர் எதிர்பார்த்தபடியே அந்த அதிசயம் நிகழ்ந்தது. எலுமிச்சைப் பழத்திற்குள் சில கோதுமைகள் இருந்தன. பாபா அறுவை சிகிச்சைக்குத் தயாரானார்.


இதில் மேலும் படிக்கவும் :