கோடரியை கொண்டு நோயை அறியும் அதிசய பாபா

பாபா
webdunia photoWD
இவர் நாசிக்-திரியம்பக் சாலையில் வசித்து வருகிறார். நோயாளிகளின் தலையில் கோடாரியை வைத்துப் பார்த்து எயிட்ஸ், கேன்சர் உள்ளிட்ட நோய்களைக் கூட கண்டுபிடித்து விடுகிறாராம். இது மட்டுமல்லாது இத்தகைய நோய்களை குணப்படுத்தி விடுவதாக அவர் கூறிக்கொள்கிறார். அவர் கூறுவது உண்மையா... நாம் நம் விசாரணையைத் துவங்கினோம்...

Webdunia|
புராணங்களும், பழங்கதைகளும், புரியாத புதிர்களையும் கொண்டது நமது நாடு. யோகம், மந்திர-தந்திரம் மற்றும் மூலிகைகள் கொண்டு தீர்க்க முடியாத வியாதிகளை குணப்படுத்தி விடுவதாக உரிமை கோரும் ஆசாமிகளும் உள்ளனர். ஆனால் சில சமயங்களில் இத்தகைய ஆசாமிகள் கூறும் விஷயங்கள் கட்டுக் கதைகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று உயரிய முன்னுரிமைகளைக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடி நபர்கள் பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நம்பினால் நம்புங்கள் பகுதியில் இம்முறை அதுபோன்ற ஒரு பாபாவை நாம் பார்க்கப்போகிறோம்...அவர் மோசடிப் பேர்வழியா இல்லையா என்பது வாசகர்களின் விருப்பம்... எங்களை பொறுத்தவரை அவரது இடத்திற்கு சென்று நாங்கள் பார்த்த விஷயங்களை அப்படியே கொடுக்கிறோம்...ிரியம்பக் கிராமத்திற்கு நாங்கள் செல்லும்போது "ஃபார்ஷி வாலே பாபா" அல்லது "கோடாரிக்கார பாபா" என்று அழைக்கப்படும் ரகு நாத் தாஸ் என்பவரைப் பற்றி கேள்விப்பட்டோம்.
ரகுனாத் பாபாவின் ஆஸ்ரமம் நோக்கி நமது வாகனம் திரும்பியது. ஆஸ்ரமத்தில் நுழைந்தவுடன் மிகப்பெரிய ஹால் ஒன்று தென் பட்டது. நிறையபேர் சிகிச்சைக்காக அங்கு வரிசையில் காத்திருந்தார்கள். படுக்கையில் 40 அல்லது 45 வயது மதிக்கத் தக்க ஒருவர் அமர்ந்து நோயாளி ஒருவரின் தலையில் கோடாரியை வைத்து ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி சிலர் நின்று கொண்டு நோயாளிகள் என்ன மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :