காளியை சாந்தப்படுத்த இரத்த ஆகுதி!

-பதா‌யி‌னி டா‌ம் கா‌ம்

webdunia photoWD
இந்த நவீன யுகத்தில் மனிதனின் இரத்தத்தை கடவுளுக்கு படைப்பது என்று ஏதாவது ஒன்று நீங்கள் கேள்விப் பட்டுள்ளீர்களா? ப‌ண்டைவழிபாட்டு முறையில் தாங்கள் வணங்கும் தெய்வத்தை சாந்தப்படுத்த இப்படிப்பட்ட முறைகள் இன்னமும் இருக்கின்றது.

இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் காளிமா என்றழைக்கப்படும் தெய்வத்திற்கு தங்களுடைய உடலில் இருந்து சிந்தும் இரத்தத்தைக் கொண்டு ஆகுதி செய்வதை உங்களுக்கு கொண்டு வருகின்றோம்.

கேரள மாநிலத்தில் உள்ள புறம்பலா தேவி கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அடவி என்றழைக்கப்படும் முள்ளின் மீது படுத்து உருண்டு அதனால் ஏற்படும் காயத்தில் இருந்து வரும் இரத்தத்தை, தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு ஆகுதியாக அளிக்கும் விழா நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோயிலில் பாதயாணி என்றழைக்கப்படும் 9 நாள் விழாவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சங்க காலத்தில் இருந்து இந்த விழா நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. வேலன் என்ற பூசாரி ஒருவர் புறம்பலா தேவி கோயிலை கடந்து சென்றபோது, இக்கோயிலில் சில பூசைகளைச் செய்தாராம். அப்பொழுது வேலுனுடன் இருந்த அடவி என்பவரை இக்கோயிலின் தெய்வம் தனதாக்கிக் கொண்டதாம். அது சக்தியைப் பெற்றதாம். அதிலிருந்து இந்தக் காளிக்கு இரத்த பூசை செய்து அதன் சக்தியை நிலைநிறுத்துவதாக புராணம் கூறுகிறது.

webdunia photoWD
இக்கோயிலில் நடைபெறும் பாதயாணி விழாவின் 9வது நாளன்று கோயிலைச் சுற்றி முள்ளால் ஆன கம்புகள் பரப்பப்படுகின்றன. இவ்விழாவில் பங்கேற்பவர்களுக்கு அக்கோயிலின் பூசாரி விபூதி தருகிறார். அன்று மாலை சீத்தங்கன் துள்ளல், வைரவி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர் நள்ளிரவு விபூதி வாங்கிய பக்தர்கள், அந்த முள் கம்புகளின் மீது உருண்டு கோயிலைச் சுற்றி வருகின்றனர்.

கோயிலைச் சுற்றி முடித்ததும் அவர்களின் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் முள் குச்சிகளை அகற்ற, அந்த காயங்களில் இருந்து கசியும் இரத்தத்தை எடுத்துச் சென்று காளிமா தேவிக்கு ஆகுதி செய்கின்றனர். இதில் கலந்துகொண்டு இரத்தத்தை அளித்தவர்கள் எவரும், தங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றே கூறுகின்றனர்.

Webdunia|
இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் இன்றும் தொடர்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :