கால பைரவரின் சிலை மது அருந்துவதைக் கண்டுள்ளீர்களா?

webdunia photoWD
சிலை ஏதாவது மது அருந்துவதை கண்டுள்ளீர்களா? நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவீர்கள். சிலை எவ்வாறு மது அருந்த முடியும்? சிலை உயிரற்ற ஒன்று, நமது அனுபவத்தைப் பொறுத்தவரை உயிரற்ற எதற்கும் பசியோ, தாகமோ ஏற்படாது என்றுதான் கூறுவோம்... ஆனால், உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்) நகரில் உள்ள கால பைரவர் சிலை இதற்கு விதிவிலக்கு. கால பைரவர் சிலைக்கு பக்தர்கள் மது அளிக்கிறார்கள். அந்த மதுவை அவர்கள் கண்ணெதிரிலேயே அச்சிலை குடிக்கிறது.

நம்பினால் நம்புங்கள் என்பதன் தொடர்ச்சியாக இந்த சிலையின் மர்மம் என்ன என்பதை அறிய புறப்பட்டோம். அதற்காக, கோயில்களின் நகரம் என்றும், மஹாகாளீஸ்வரரின் (சிவபெருமானின் 12 ஜோதி லிங்க திருத்தலங்களில் ஒன்று) நகரம் என்றும கூறப்படும் உஜ்ஜைன் நகருக்குச் சென்றோம்.

மஹாகாளீஸ்வரர் கோயிலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயிலிற்குச் சென்றோம். கோயிலின் பிரதான வாயிலிற்கு அருகே சென்றபோது அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. கோயிலிற்கு வெளியே பூஜைக்காகவும், அர்ச்சனை செய்யவும் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் கடைகளில் பூக்களுடன் மது பாட்டில்களும் விற்கப்படுவதைக் கண்டோம். சில பக்தர்கள் மது பாட்டில்களை வாங்கிச் செல்வதையும் பார்த்தோம்.

Webdunia|
webdunia photoWD
இக்கோயிலைப் பற்றிக் கூறப்படும் மர்மம் குறித்து அங்குள்ள கடைக்காரரான ரவிவர்மா என்பவரிடம் விசாரித்தோம். அவர் கூறினார், "பைரவரின் கோயலிற்கு வரும் ஒவ்வொரு பக்தரும் அந்தக் கடவுளிற்கு மதுவை அளிக்கின்றனர். மது நிரப்பப்பட்ட கிண்ணம் பைரவரின் வாயைத் தொட்டதும் அதிலிருந்த மது மறைந்துவிடுகிறது" என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :