காந்தர்வபுரி கோயில் : உருவம் மாறும் நாகத்தை வழிபடும் எலிகள்!

webdunia photoWD
இந்தத் திருக்கோயிலில் ஒவ்வொரு நாளும் ஒரு அதிசயம் நிகழ்வதாக நாங்கள் கேள்விப்பட்டோம். இக்கோயிலின் ஒரு பகுதியில் இரவு நேரத்தில் உருவம் மாறும் நாக தேவனை ஏராளமான எலிகள் சுற்றி வந்து வழிபடுவதாக கூறுகின்றனர். ஆனால், அதனை ஒருவரும் நேரில் கண்டதாக கூறவில்லை.

ஒவ்வொரு நாள் காலையிலும் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தால் வட்டமான பாதையில் எலி புழுக்கைகளும், பாம்பின் எச்சமும் கலந்து கிடப்பதை பலரும் கண்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் தூய்மைபடுத்தப்பட்டாலும், மறுநாள் காலை இதே காட்சியைக் கண்டுள்ளனர்.

இக்கோயிலில் காந்தர்வ சேனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரை கார்தாபில் என்றும் அழைக்கின்றனர். இந்த அரசரைப் பற்றி பல கதைகள் கூறப்படுகிறது. இந்தக் கோயில் ¦ழுட்டு பிரிவுகளாக இருந்ததாகவும், அதன் மையப் பகுதியில் அரசனின் சிலை வைக்கப்பட்டிருந்தாகவும், ஆனால் காலப் போக்கில் அழிந்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்தக் கோயிலின் அதிசயங்களைப் பற்றி நமக்கு விவரித்த பூசாரி மகேஷ் குமார், இக்கோயிலின் ஒரு பகுதியில் பாம்பு புற்று ஒன்று இருந்ததாகவும், இக்கோயிலிற்கு அருகில் உள்ள காடுகளிலும் ஏராளமான பாம்புகள் இருந்ததாகவும், அதே நேரத்தில் கோயிலிற்குள் ஏராளமான எலிகளும் இருந்ததாகவும் கூறினார்.

இக்கோயிலை உருவம் மாறும் ஒரு நாகதேவன் காத்து வருவதாக தனது முன்னோர்கள் கூறியதாக மகேஷ் குமார் கூறினார்.

webdunia photoWD
அந்த ஊரில் வாழும் கமல் சோனி, கேதார்நாத் ஆகியோர், தாங்கள் அந்த அதிசயத்தை நேரில் கண்டதாகக் கூறினர். மஞ்சள் நிறத்தில் 12 நீளத்தில் அந்தப் பாம்பு இருந்ததாகவும், அதற்கு மீசையும் இருந்ததென கூறினர். ரமேஷ் சந்திரா ஜாலாஜி என்பவரும் அந்தப் பாம்பைக் கண்டதாகக் கூறினார்.

இக்கோயிலில் வாழும் எலிகள் நாகதேவனை சுற்றி வருவதைப் போல, இக்கோயிலிற்கு அருகில் உள்ள சோம்பதி நதியும் கோயிலைச் சுற்றித்தான் செல்கிறது.

இக்கோயிலிற்கு வருபவர்களை எப்படிப்பட்ட துன்பமும், துயரமும் சூழ்ந்திருந்தாலும் இக்கோயிலிற்குள் நுழைந்தவுடன் மறைந்துவிடும் என்று அந்த கிராமத் தலைவர் விஜய் சிங் செளகான் கூறினார்.

Webdunia|
இந்தவார நம்பினால் நம்புங்களில் சரித்திர முக்கியத்துவமும், ஆன்மீக முக்கியத்துவமும் கொண்ட ஒரு கோயில் ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்தக் கோயிலில் பல அதிசயங்கள் உள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காந்தர்வபுரி என்றழைக்கப்படும் இடத்தில் இந்த காந்தர்வ சேன் திருக்கோயில் உள்ளது. காந்தர்வ சேன், உஜ்ஜைனை தலைநகராகக் கொண்டு ஆண்ட விக்ரமாதித்தனின் தந்தை ஆவார்.
இப்படிப்பட்ட நம்ப முடியாத அதிசயங்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :