வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2016 (21:22 IST)

கொசுவின் கடியால் பரவும் வைரஸ்: அமெரிக்க நாடுகள் அனைத்திலும் பரவக்கூடும்

சில தென்னமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸிகா வைரஸ், கனடாவையும் சிலியையும் தவிர்த்து மற்ற அமெரிக்க கண்ட நாடுகள் அனைத்திலும் பரவக்கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


 

 
கடந்த ஆண்டு மே மாதம் துவங்கி பிரசிலில் இக்கிருமி வேகமாகப் பரவிவருகிறது.
 
அடெஸ் என்கிற கொசுவின் கடியால் பரவும் இது குழந்தைகள் பாதிப்புடன் பிறப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
இந்த குறிப்பிட்ட அடெஸ் ரக கொசுக்கள் தவிர வேறு வகையிலும் இந்த வைரஸ் பரவுதற்கான சாத்தியம் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.


 

 
ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதைக் காட்டக்கூடிய நோயின் அறிகுறிகள் மிகவும் மென்மையானவையாக இருப்பதால் இதனை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நோய்ப் பரவியுள்ள நாடுகளுக்கு செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.