வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2014 (17:59 IST)

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தியது ஜெர்மனி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி தனது முதல் ஆட்டத்தில் போர்ச்சுகலை 4-0 எனும் கணக்கில் வென்றுள்ளது.
 
மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி 'ஜி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகலை எளிதாக வென்றது.
 
போர்ச்சுகல் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற வீரர்கள் இருந்தும் ஜெர்மனியின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.
இந்த ஆட்டத்தில் 12 ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் முதல் கோலை முல்லர் அடித்தார்.
 
பின்னர் ஹம்மெல் 32 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ஜெர்மனி 2-0 எனும் கோல் கணக்கில் மேலும் முன்னேறியது. பெப்பே முல்லரின் தலையில் மோதியதால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இடைவேளைக்கு சற்று முன்னர் முல்லர் மீண்டும் ஒரு கோல் போட ஜெர்மனி 3-0 எனும் வலுவான நிலையை அடைந்தது.
 
முல்லர் 78 ஆவது நிமிடத்தில் மிகவும் லாவகமாக பந்தை கோல் வலைக்குள் தள்ள ஜெர்மனி அசைக்க முடியாத அளவுக்கு 4-0 என வலுப் பெற்றது. போர்சுகல் அணிக்கு ஆட்டத்தின் 36 ஆவது நிமிடத்தில் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
 
அதன் வீரர் பெப்பே முல்லரின் தலையில் தெரிந்தே மோத, அதற்காக அவர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு, ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் போர்ச்சுகல் 10 வீரர்களுடனேயே ஆடும் ஒரு நிலை ஏற்பட்டது.