வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (11:06 IST)

இத்தாலியில் ஏன் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது?

இத்தாலியில் ஏன் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது?

இத்தாலியின் மத்திய பகுதியை நேற்று புதன்கிழமை தாக்கிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதாக அதிகரித்துள்ளது.


 

 
பூகம்பமும் அதனை அடுத்த அதிர்வுகளும் மூன்று புராதன நகரங்களை நிர்மூலம் செய்துள்ளன.இத்தாலியில் இந்த பிராந்தியத்திற்கு பூகம்பங்கள் புதியவை அல்ல. பல தசாப்தங்களாக இந்த பிராந்தியம் பல பூகம்பங்களை கண்டு வந்திருக்கிறது.
 
ஆப்ரிக்க, யூரேஷிய நிலத்தட்டுக்கள் ஒன்றோடொன்று மோதும் இடம் என்பதால் இது ஆபத்தான பகுதி.ஆண்டுக்கு மூன்று சென்டி மீட்டர் அளவு இவ்விரு நிலத்தட்டுக்களும் ஒன்றைநோக்கி மற்றது தொடர்ந்து நகர்கிறது.
 
நாட்டின் மேற்கிலுள்ள கடல் பிளவுபடுவதால் இத்தாலியின் மத்தியில் நீளும் அபெனைன்ஸ் மலைத்தொடரும் சிதைகிறது.2009 ஆம் ஆண்டு லாகுலாவில் நடந்த நிலநடுக்கத்தில் 300 பேர் பலியானார்கள்.
 
1908 ஆம் ஆண்டு சிசிலியின் மெசினாவைத் தரைமட்டமாக்கிய 7.2 ரிக்டர் புள்ளி நிலநடுக்கத்தில் 70,000 பேர் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது.