வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 3 ஜூலை 2014 (12:00 IST)

காலிறுதிக் கட்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை

பிரேசிலில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2014, காலிறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.


எந்தெந்த அணிகள் இதில் பங்குபெறும் என்பது இப்போது முடிவாகியுள்ளன.
 
முதல் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸும், ஜெர்மனியும் மோதுகின்றன. இந்தப் போட்டி ஜூலை நான்காம் தேதி ஃபோர்ட் எலிசாவிலுள்ள காஸ்ட்டெலோ அரங்கில் நடைபெறும்.

 
அதே நாளில் நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டி ரியோ டி ஜெனீரோவிலுள்ள மேரக்கானா அரங்கில், பிரேசில்-கொலம்பிய அணிகளுக்கு இடையே நடக்கும்.
 
காலிறுதிக்கு முந்தையப் போட்டியில் பிரான்ஸ், நைஜீரியாவை 2-0 எனும் கணக்கிலும், ஜெர்மனி, அல்ஜீரியாவை 2-1 எனும் கணக்கிலும் வென்றன.
 
போட்டிகளை நடத்தும் பிரேசில், சிலி அணியை 3-2 எனும் கணக்கிலும்(பெனால்டியில்), கொலம்பியா, உருகுவேயை 2-0 எனும் கணக்கிலும் வென்றன.

 
இரண்டாம் சுற்று காலிறுதி ஆட்டங்கள் ஜூலை ஐந்தாம் தேதி நடைபெறுகின்றன.
 
அதில், பிராசிலாவிலுள்ள தேசிய விளையாட்டு அரங்கில் அர்ஜெண்டினா-பெல்ஜியம் அணிகள் ஆடுகின்றன.
 
மற்றொரு ஆட்டம் சால்வெடோரிலுள்ள ஃபாண்டே நோவா அரங்கில் நெதர்லாந்து-கோஸ்ட்டாரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும்.
 
இதற்கு முந்தையச் சுற்றில், அர்ஜெண்டினா 1-0 எனும் கணக்கில் சுவிட்சர்லாந்தையும், பெல்ஜியம் அமெரிக்காவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றன.
 
நெதர்லாந்து மெக்ஸிகோவை 2-1 என்றும், கோஸ்ட்டாரிக்கா கிரேக்கத்தை 5-3(பெனால்டியில்) என்றும் கோல் கணக்கில் வென்று இந்த நிலைக்கு வந்துள்ளன.
 
இந்த எட்டு அணிகளில் வெற்றி பெரும் நான்கு, ஜூலை எட்டு மற்றும் ஒன்பதாம் தேதி அரையிறுதியில் மோதும்.