வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 2 ஜூலை 2014 (06:43 IST)

திருநங்கை கிரேஸ் பானுவின் சாதனைப் பயணம்

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைகளில் இணையான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்திருந்த்தை அடுத்து கடும் போராட்டங்களுக்கு பிறகு பொறியியல் கல்லூரியில் அனுமதி பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு.



காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில நேரடியாக இரண்டாம் ஆண்டில் பொறியியல் படிப்பதற்கு இந்தியாவின் முதல் திருநங்கையாக தேர்ச்சிபெற்றுள்ளார் கிரேஸ் பானு.
 
கணினி பொறியியலில் டிப்ளமோ படித்திருக்கும் கிரேஸ் பானுவுக்கு, அரக்கோணத்திலுள்ள சுயநிதி கல்லூரி ஒன்றில் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் படிக்க அனுமதி கிடைத்திருக்கிறது.
 
பிளஸ்-2 படித்து கொண்டிருந்த நேரத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அவர், வாழக்கையில் பல சிரமங்களைக் கடந்து வந்துள்ள கிரேஸ் பானு இந்த நிலையை அடைந்துள்ளார்.
 
தனது வெற்றி ஒரு முதபடிதான் என்றும், அனைத்து மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் முறையாக கல்வி கிடைப்பதே பெரிய வெற்றி என்று அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் கூறினார்.
 
தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த பானு, டிப்ளமோ படிப்பில் 94 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்த போதிலும், அரசு கல்லூரியில் இடம் கிடைக்காதது தனக்கு சற்று வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.