1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : புதன், 11 ஜூன் 2014 (18:56 IST)

ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷன் வாடகைக் கார் சேவையை எதிர்த்து ஐரோப்பிய கார் ஓட்டுநர்கள் போராட்டம்

ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷன் மூலம் வாடகைக் கார் சேவைகளைப் பயன் படுத்துவது அதிகரித் து வருவதற்கு எதிராக, பல ஐரோப்பி
ய நகரங்களில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனர்.
 
லண்டனின் புகழ் பெற்ற கறுப்பு வாடகைக் கார் ஓட்டுநர்கள் நகர மையத்தினூடாக வண்டிகளை மெதுவாக ஓட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறார்கள்.
 
மேலும், பாரிஸ், பெர்லின், ரோம் மற்றும் பிற முக்கிய ஐரோப்பிய நகரங்களில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து இயங்கும் ‘உபெர்‘ என்ற சேவை வாடகைகார் தொழில் விதிகளை மதிப்பதில்லை, உரிமம் பெறாத ஓட்டுநர்களை தொழிலில் ஈடுபட அனுமதிக்கிறது என்று பிரான்ஸ் டாக்ஸி நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகி கூறினார். இதற்குப் பதிலடியாக, ‘உபெர்‘ தனது பாரிஸ் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீதம் கட்டணக் குறைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
 
அங்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தால் பிரான்ஸ் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள், ஏனென்றால் அங்கு ஏற்கனவே ரயில் சேவைகள், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளன.