வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (19:18 IST)

இந்தியாவில் கடும் வெப்பநிலை: 800 பேர் வரை உயிரிழப்பு

இந்தியாவில் வீசும் கடுமையான வெப்பக்காற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தொட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 
நாட்டின் பல பகுதிகளில் வீசி வரும் இந்த வெப்பக்காற்று காரணமாக சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் எட்டியுள்ளது.
 
தென் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவிலேயே வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலானோர் இறந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த இரு மாநிலங்களில் 750 பேர் வரை வெயிலின் உக்கிரத்தால் பலியாகியுள்ளனர்.
 
வெப்பக்காற்றின் காரணமாக மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும், வெளியே செல்வதானால் குடிநீர் எடுத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் நோக்கில் உள்ளூர் அமைப்புகளை தண்ணீர் பந்தல்களை வைத்து உதவிடவும் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
 
இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் கோடை மழை தொடங்கும் வரை உயர்ந்த வெப்பநிலையே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.