1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (15:39 IST)

ஹஜ் பயணிகளுக்கு மின்னணு அடையாள அட்டை - சௌதி அறிமுகம்

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் அனைவருக்கும் மின்னணு அடையாள கைப்பட்டைகளை வழங்கும் முறையை சௌதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
 

 
கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட ஜன நெரிசலில் ஏராளமானோர் இறந்ததை அடுத்து , மின்னணு அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
 
கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட நெரிசல் விபத்தில், குறைந்தது 2,000 பேர் கொல்லபட்ட சம்பவத்தை அடுத்து , இந்த வருடாந்திர புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் பல கோடிக்கணக்கான முஸ்லீம்களுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வருகிறது.
 
இந்த கைப்பட்டைகளில் பயணிகளின் அந்தரங்கத் தகவல்கள் மற்றும் மருத்துவத் தகவல்கள் இருக்கும் என்று சௌதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களைக் கொண்டு அதிகாரிகளால் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும், அவர்களை அடையாளம் காணவும் முடியும்.
 
கடந்த் ஆண்டு ஏற்பட்ட நெரிசல் விபத்தில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரமங்கள் இருந்ததாக சில வெளிநாட்டு அதிகாரிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தன.