வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2015 (20:19 IST)

பிகாஸோவின் நிர்வாண பெண் ஓவியம் 67 மில்லியனுக்கு ஏலம்

பிரபல ஓவியர் பாப்லோ பிகாஸோ வரைந்த அபூர்வமான ஓவியம் ஒன்று 67 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
 

 
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றிலேயே அவரது ஓவியம் விலைக்கு வாங்கப்பட்டது. நிர்வாணமாக காபரே நடனமாடும் பெண்ணின் உருவம் ஒன்றை கான்வாஸ் திரையில் அவர் வரைந்துள்ளார்.
 
இந்த ஓவியத்தின் பின்புறத்தில் பிகாஸோவின் கலைபடைப்புகளை விற்கும் ஒரு நபரின் உருவத்தை கேலியாக சித்தரிக்கும் வகையில் ஒரு ஓவியமாக அவர் தீட்டியிருந்தார் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
 

 
கடந்த 2000ஆம் ஆண்டு அந்த ஓவியம் சீரமைத்தபோதே இது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்த ஓவியத்தை 1984ஆம் ஆண்டு வில்லியம் கோஹ் எனும் வர்த்தகர் மூன்று மில்லியன் டாலர்களுக்கு மட்டுமே வாங்கியிருந்தார்.
 
அவரே அபூர்வமான அந்த ஓவியத்தை இப்போது 67 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.