வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (20:15 IST)

ஏழைகளைத் தவிக்கவிட்டு செல்வந்தர்கள் காசு சேர்ப்பதில் குறியாக உள்ளனர் - போப் சாடல்

ஆப்பிரிக்கா சென்றுள்ள கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் ஃபிரான்சிஸ், கென்யத் தலைநகர் நைரோபியில் ஒரு குடிசைப் பகுதியை ஒட்டி நடத்திய பொதுக்கூட்டத்தில், செல்வத்தில் திளைப்போர் ஏழைகளின் அவல நிலையை கண்டுங்காணாதிருப்பதாக விமர்சித்துள்ளார்.
 

 
அடிப்படை துப்புரவு வசதிகளும் இல்லாத நிலையில் ஐம்பதாயிரம் பேர் வாழும் கன்கெமி குடிசைப் பகுதிக்கு போப்பாண்டவர் விஜயம் செய்தபோது, பெருந்திரளான மக்கள் அங்கே கூடியிருந்தனர்.
 
புறக்கணிக்கப்பட்ட விளிம்பிலுள்ள இடங்கள் என்று குறிப்பிட்டு, அப்படியான இடங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர், பள்ளிக்கூடங்கள் போன்ற வாழ்க்கைச் சூழல் வசதிகளும் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
ஏழைகளை கஷ்டப்பட விட்டுவிட்டு, வளங்களைச் சுரண்டுவதிலும் பணத்தைக் குவிப்பதிலும் செல்வந்தர்கள் குறியாய் இருப்பதாக பாப்பரசர் சாடினார்.
 
கென்யாவிலிருந்து யுகாண்டாவுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கு சென்று, தனது ஆப்பிரிக்க பயணத்தை அவர் நிறைவு செய்யவுள்ளார்.