ரிசர்வ் வங்கிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தொடர்ந்து மாற்றிக் கொள்ளலாம்


Murugan| Last Updated: வெள்ளி, 25 நவம்பர் 2016 (13:45 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து அந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும்.

 

 
ரிசர்வ் வங்கி இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இன்று முதல் வங்கிகளில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது. அவற்றை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும் என்று அரசு நேற்று அறிவித்தது.
 
ஆனால், ரிசர்வ் வங்கியில் மட்டும் அந்த நோட்டுக்களை தொடர்ந்து மாற்ற முடியும்.
 
பழைய ரூபாய் நோட்டுக்கள் 4500 ரூபாய் வரை, வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, அது 2 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதிக அளவிலான பொதுமக்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு குறைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

 

இதில் மேலும் படிக்கவும் :