வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (11:55 IST)

பாகிஸ்தானில் மத நிந்தனை வதந்தியை அடுத்த வன்முறையில் மூவர் பலி

பாகிஸ்தானில், பேஸ்புக் தளத்தில் மத நிந்தனை செய்யும் வண்ணம் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டதாக வந்த வதந்திகளை அடுத்து, பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதில், ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்று போலிசார் கூறுகின்றனர்.
 
சினமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்தச் செயலைச் செய்ததாக போலிசார் கூறினர்.
 
பலியானவர்கள் சிறுபான்மை இஸ்லாமியக் குழுவான அஹ்மதி குழுவைச் சேர்ந்தவர்கள் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இந்தச் சம்பவம், பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா என்ற நகரில் நடந்தது.
 
இரண்டு மாதங்களுக்கு முன்னர், இதே மாகாணத்தில் ஒரு கிராமத்தில், போலிஸ் நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த ஒரு பதின்பருவ இளைஞன், மத நிந்தனைக் குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு வந்த ஒரு அஹ்மதி பிரிவு நபரைச் சுட்டுக் கொன்றான்.
 
அஹ்மதி இனத்தைச் சேர்ந்த மக்கள் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பாகிஸ்தானால் 1974இல் அறிவிக்கப்பட்டனர்.