ஒமர் இதயத்தில் இவ்வளவு வெறுப்பு இருந்தது எனக்கு தெரியாது: தந்தை சித்திக்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 13 ஜூன் 2016 (17:59 IST)
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், ஒரு பாலுறவுக்காரர்கள் கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 50 பேரை கொன்ற ஒமர் மடீனின் தந்தை, தன்னுடைய மகனுடைய இதயத்தில் இவ்வளவு வெறுப்பு இருந்தது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
 
 
நவீன அமெரிக்க வரலாற்றில், இப்படி ஒரு மோசமான துப்பாக்கிச்சூட்டை நடத்த ஒமர் மடீனை எது தூண்டியது என்பது குறித்து தன்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என ஆப்கனில் பிறந்த ஒமர் மடீனின் தந்தை மிர் சித்திக் தெரிவித்துள்ளார்.
 

 
மேலும், ஆப்கன் மக்களுக்கு சித்திக் அனுப்பிய வீடியோ செய்தியொன்றில், அமெரிக்க பிரஜையான தனது மகன் ஒமர் திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுத்தற்கு முன் நல்ல பிள்ளையாக இருந்தாகக் கூறியுள்ளார்.
 

 
ஒமர் மடீன் நிலையற்ற மனநிலைகாரர், வன்முறையில் ஈடுபடக்கூடியவர் என்றும் ஆனால் அவர் மதத் தீவிரவாதி என்பது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும் மடீனின் முன்னாள் மனைவி வர்ணித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :