1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (19:02 IST)

முஸ்லீம்களைக் கண்காணிக்கும் நியுயார்க் போலிஸ் திட்டம் கைவிடப்பட்டது

நியுயார்க் நகரில் முஸ்லிம் சமுதாயத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கண்காணிப்புத் திட்டத்தை தான் கைவிட்டுவிட்டதாக, நியுயார்க் போலிஸ் துறை கூறியிருக்கிறது.

இந்தத் திட்டத்தின்கீழ், முஸ்லீம் சமூகத்தினரின் உரையாடல்களை ஒட்டுக்கேட்க சாதாரண உடையில் போலிசாரை அனுப்புவது, அவர்களது அன்றாட நடவடிக்கைகள் எங்கு நடக்கின்றன என்பதைப் பற்றிய விவரங்களை ஆவணப்படுத்துவது, முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் வசிப்போர் விவரங்களைப் பதிவு செய்வது போன்றவை அடங்கும்.
 
இந்தத் திட்டத்தை சிவில் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் செய்ததுடன், இதற்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்குகளும் பதியப்பட்டன.
 
இரட்டைக் கோபுரக் கட்டிடங்கள் மீது 2001 செப்டம்பரில் நடத்தப்பட்டத் தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து உருவாக்கப்பட்ட பல உளவு சேகரிக்கும் நடைமுறைகளை அமெரிக்க அரசு மறு பரிசீலனை செய்து வரும் வேளையில் இந்தத் திட்டத்தைக் கைவிடும் முடிவு வருவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.