வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 மே 2014 (19:13 IST)

இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகள் விடுதலைப் புலிகளுக்கு தடை

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விடுதலைப் புலிகளை 'சட்டவிரோத அமைப்பு' என்று கூறியுள்ளது.
 
இதுவரை காலம் அந்த அமைப்பின் மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் நேற்று- புதன்கிழமை(14.5.2014) முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதானத் தடை இந்த முறை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இதனால் அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கும் என்றும் கூறுகிறார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்பழ.