இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம்

இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம்
Last Modified ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (07:14 IST)
ஜேர்மனி நாட்டில், ‘’பெஜிடா’’ என்ற பெயரில் வளர்ந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு எதிராக ஜேர்மனியின் ஜூதர்களுக்கான மத்திய கவுன்ஸிலின் தலைவர் பேசியுள்ளார்.


முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் ஒட்டுமொத்தமாக அந்த மதத்தையே இழிவுபடுத்த பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜேர்மனிய பத்திரிகை ஒன்றுக்கான செவ்வியில், ஜோசப் ஜூஸ்டர் கூறியுள்ளார்.
 
மேலும் இஸ்லாமிய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கான பெஜிடாவின் திட்டங்கள் குறித்து ஜேர்மனியில் உள்ள றோமன் கத்தோலிக்க திருச்சபையும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
 
அந்த இயக்கம் தோன்றிய இடமான ட்ரெஸ்டனில் திங்களன்று நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
 
இறுக்கமான குடிவரவு கட்டுப்பாடுகள் தேவை என்று பெஜிடா கோருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :