வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (21:11 IST)

மாட்டிறைச்சி விவகாரம்: பெண்களை தாக்கியவர்கள் உடனே பிணையில் விடுதலை

இந்தியாவில் உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில், மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக குற்றம்சாட்டி, இரண்டு இஸ்லாமியப் பெண்களை தாக்கிய பசுப் பாதுகாப்பு கண்காணிக் குழுவினர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 
இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தாக்கிய நான்கு தாக்குதல்தாரிகளும் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
மேற்கூறிய தாக்குதல் நடந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை கொல்வது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. இந்துக்கள் பசுவை புனிதமான விலங்காக கருதுகின்றனர்.
 
இவ்விரு பெண்களும் எடுத்துச் சென்ற இறைச்சி, உண்மையில் எருமை மாட்டிறைச்சிதான் என்பது சில பூர்வாங்க சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்து தேசியவாதக் கட்சியான ஆளும் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) சேர்ந்த அமைச்சர் ஓருவர், பசுப் பாதுகாப்பு குழுக்களுக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உரிமையுள்ளது என அவர்களுக்கு ஆதரவாக வாதிட்டுள்ளார்.