வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2015 (16:46 IST)

வெறிநாய்க்கடி இறப்புகள் இந்தியாவில்தான் மிக அதிகம் - ஆய்வு

வெறிநாய்க்கடி மூலம் ஏற்படும் ரேபிஸ் நோய் காரணமாக, உலகில் ஆண்டொன்றுக்கு சுமார் 59000 பேர் பலியாவதாக, பிரிட்டன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
 

 
குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் நாடுகளில், நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து மேலும் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, வெறிநாய்க்கடி நோய்க்கட்டுப்பாடு தொடர்பில் செயற்படும், குளோபல் அலையன்ஸ் ஃபார் ரேபிஸ் (Global Alliance for Rabies) என்ற அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.
 
ரேபிஸ் நோய்த் தாக்கம் உள்ள மிருகம் கடிக்கும் போது, அதன் எச்சில் ஊடாக அந்த நோய் பரவுகின்றது. பொதுவாக நாய்கள் மூலமாகவே இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது.
 
நாய்க்கடி தாக்குதலுக்கு உள்ளானவர்களிற்கான தடுப்பூசி இன்னும் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்க செய்யப்பட வேண்டும் என, ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
 
வெறிநாய்க்கடி மூலம் அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கள் இந்தியாவிலேயே ஏற்படுவதாகவும், ஆண்டுதோறும் 20,000 பேருக்கும் அதிகமானோர் பலியாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.