திருமணம் செய்ய விரையும் ஒருபாலினத்தவர்

Last Modified சனி, 27 ஜூன் 2015 (20:39 IST)
அமெரிக்காவில் வாழும் ஒருபாலினத்தவர் அனைவரும் நாட்டின் எந்த மாநிலத்திலும் திருமணம் செய்துகொள்ள சட்டரீதியான உரிமை உள்ளது என, அமெரிக்க உச்சநீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்ததை அடுத்து, அமெரிக்க மாநிலங்கள் பலவற்றிலும் ஒருபாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்காக விரைகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்த ஒன்பது நீதிபதிகளில், ஐந்து நீதிபதிகள் ஒருபாலினத்தவருக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை உள்ளது என்றும் நான்கு நீதிபதிகள் இதற்கு மாறாகவும் வழங்கிய தீர்பின் மூலம், இதுவரை ஒருபாலினத்தவர் மத்தியிலான திருமணத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் 14 மாநிலங்களிலும், அந்தத் தடை இனிமேலும் நடைமுறையிலிருக்க முடியாது

ஒருபாலினத்தவரின் திருமண உறவை உறுதி செய்திருக்கும் நீதிமன்றின் தீர்ப்பைக் குறிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் மாளிகை, நேற்றிரவு ஒருபாலினத்தவரின் சின்னமாக விளங்கும் வானவில் வர்ணங்களால் ஜொலித்தது.

ஒருபாலினத்தவர் மத்தியிலான திருமணங்களின் பதிவுச் சான்றிதழை வழங்க அமெரிக்காவின் சில உள்ளுர் அதிகார சபைகள் இதுவரை மறுத்து வந்தன.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப்பிறகு புதிய சட்டத்தின் படி இனிமேல் தாங்கள் ஒருபாலின தம்பதிகளுக்குத் திருமண சான்றிதழ்கள் வழங்க சம்மதிப்போம் என்று அவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :