வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (07:50 IST)

வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமல் புவி வெப்பமடைதலை தவிர்க்க முடியும்'

உலக பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி தற்போது வெளிவந்துள்ள ஐநா அறிக்கையில், அதிகமாக கரிமத்தை சுற்றாடலில் வெளியிடக்கூடிய எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உலகம் வேகமாக விலகக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமலேயே பேரழிவைத் தரக்கூடிய புவி வெப்பமாதலை தவிர்க்க முடியும் என்று காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
பெட்ரோலிய எரிபொருளை பயன்படுத்தலை பாரிய அளவில் குறைப்பது தாக்குப்பிடிக்கக் கூடிய ஒன்றே என்று புதிய ஐநா அறிக்கை ஒன்று கூறுகிறது.
 
தூய்மையான, மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எரிபொருளை நோக்கியும் மற்றும் எரிபொருள் வீணாதலை குறைக்கவும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.
 
இதனால், சற்று தாமதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படுமே ஒழிய, பெரும் தியாகத்தை செய்ய வேண்டிய நிலை வராது என்றும் அக்குழு கூறியுள்ளது.