1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 6 ஜூன் 2014 (17:15 IST)

உக்ரைன் நெருக்கடி: ரஷ்யா மீது தடை விதிக்க G-7 திட்டம்

பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகளின் கூட்டமைப்பான G-7 அமைப்பின் உச்சிமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடந்துவருகின்ற நிலையில், அதன் இரண்டாம் நாள் கூட்டத்தில் மேற்கு உலகத் தலைவர்கள் உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி கவனம் செலுத்தவுள்ளனர்.
 
கிழக்கு உக்ரைனின் உறுதித்தன்மையை குலைக்கும் விதமாக ரஷ்யா இனி நடந்துகொள்ளுமானால், அதன் மீது கூடுதல் தடைகளை விதிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் தயாராக உள்ளன.
 
இந்த சந்திப்பையடுத்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கும், பிரிட்டன், பிரான்ஸ் தலைவர்களுக்கும் இடையில் பாரிஸ் நகரில் சந்திப்பொன்று நடக்கவுள்ளது. வாய்ப்பிருந்தால் ஜெர்மனியின் தலைவரும் இதில் கலந்துகொள்வார்.
 
பேச்சுவார்த்தைகளின் விளைவாக உக்ரைன் மீதான மோதல் கணிசமாகத் தணிய வாய்ப்புள்ளது என பிரஸ்ஸல்ஸிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
 
கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்த நிலையில் G-7 அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் நடக்கின்ற முதல் உச்சிமாநாடு இதுவாகும்.