வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2015 (20:42 IST)

நேரு பல்கலைக்கழகத்தில் மாட்டிறைச்சி ஆவணப்படம்

டில்லியில் கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு ஆவணப்படத் திரைவிழாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்ட"காஸ்ட் ஆன் தி மெனு கார்ட்" என்கிற படம், பின்னர் ஞாயிற்றுக்கிழமை டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் வளாகத்தில் திரையிடப்பட்டது.


 
 
மாணவ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த தனிப்பட்ட திரையீட்டுக்கும் பிரச்சனைகளை ஏற்பட்டதாக சில மாணவர்கள் கூறுகின்றனர்.
 
சாதி மயமாக்கப்பட்டிருக்கும் உணவு பழக்க வழக்கங்களை இப்படம் விவரிப்பதாக கூறுகிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவ அமைப்பை சேர்ந்த ஜெயபால்.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஊடக மாணவர்களின் படிப்பிற்கான பயிற்சியின் ஒரு பகுதியாகவே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
தற்போது மாட்டிறைச்சி தொடர்பான அரசியல் சர்ச்சை நிலவுவதால் மட்டுமே, இப்படத்திற்கு ஆவணப்படத் திரைவிழாவில் அனுமதி மறுக்கப்பட்டதாக அதை உருவாக்கியவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இதனால் இப்படத்தை டில்லியில் சுயாதீனமாக திரையிட அவர்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதுதான், மாணவ அமைப்பினர் இவர்களுக்கு உதவியதாக படத்தை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றிருந்த அதுல் பிபிசியிடம் கூறினார்.
 
ஆசிய வாழ்வாதரங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜீவிகா என்கிற ஆவணப்பட திரைவிழாவின், 12 ஆவது ஆண்டு விழா, டில்லியில் கடந்த வெள்ளிகிழமை துவங்கியது. இந்த விழாவின் இரண்டாவது நாளான, கடந்த சனிக்கிழமை திரையிட பட்டியலிடப்பட்டிருந்த "காஸ்ட் ஆன் தி மெனு கார்ட்" என்கிற ஆவணப்படம் தவிர மற்ற 34 படங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
 
மாமிச உணவுகள் தொடர்புடைய விவகாரங்களை, வெறும் உணவுக்கான போராட்டமாக மட்டுமே கருத முடியாது எனவும், அது வாழ்வாதாரம், சமுக பாகுபாடு மற்றும் மனித உரிமை போன்ற பெரிய பிரச்சனைகள் சார்ந்தவையாக பார்க்க வேண்டியுள்ளது என "காஸ்ட் ஆன் தி மெனு கார்ட்" என்கிற அந்த ஆவணப்படம் குறிப்பிடுகிறது.