தேர்தல் பிரச்சாரத்தில் போப்பாண்டவர் படத்தை பயன்படுத்த கூடாது

தேர்தல் பிரச்சாரத்தில் போப்பாண்டவர் படத்தை பயன்படுத்த கூடாது
Last Modified திங்கள், 24 நவம்பர் 2014 (05:28 IST)
இலங்கையின் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரச்சாரத்தில் போப்பாண்டவர் ஃபிரான்சிஸின் படங்களை பயன்படுத்தக்கூடாது என அந்நாட்டின் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் வரும் ஜனவரி 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் தரப்பு எதிர்தரப்பு என்று இருதரப்பாலுமே போப்பாண்டவரின் படங்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேர்தல் முடிந்த சில நாட்களில் ஜனவரி 13-15 ஆகிய தேதிகளில் போப்பாண்டவர் ஃபிரான்ஸிஸ் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :