பூமியின் ஆழமான பகுதி எங்குள்ளது தெரியுமா?

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 13 டிசம்பர் 2019 (14:59 IST)
பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதி எது என கண்டறியப்பட்டுள்ளது.
 
கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்கு கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் (கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி ஆழம்) உள்ள பள்ளத்தாக்குதான் பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
கடல்கள் மற்றும் சமுத்திரங்களில் மட்டும் தான் இதை விட ஆழமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதி 20 கிலோமீட்டர் அகலமும், 100 கிலோமீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது.
 
இந்த இடம் பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்டு மிக அடர்த்தியாகவும், இருட்டு பிரதேசமாகவும் காட்சியளிப்பதாக இது குறித்த ஆராய்ச்சியில் நீண்டநாள் ஈடுபட்டிருந்த அறிவியலாளர் மார்லிகம் தெரிவித்தார்.
 
அதேவேளையில், நீர்பரப்பையும் உள்ளடக்கிய பூமியின் ஆழமான இடம் டெட் ஸியின் (Dead Sea) மையப்பகுதிக்கு அருகே உள்ள இடம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 1355 அடி ஆழத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :