மாறு அல்லது மடி: பிரிட்டனுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடும் எச்சரிக்கை

Britain
Sasikala| Last Updated: புதன், 13 அக்டோபர் 2021 (10:18 IST)
பிரிட்டனில் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்தனர்.
 
தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்காவிட்டால் “அது பிரிட்டனிலும் இப்போதோ பிறகோ நடக்கும்” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
“மாறு அல்லது மடி” என்று அந்த அமைப்பின் தலைவர் எம்மா ஹோவார்ட் கூறியுள்ளார்.
 
இப்படியான கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கும் தொனி பருவநிலை மாறுபாட்டு விளைவுகளுக்கு அரசை தயார்படுத்துவதற்காக வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
 
புதன்கிழமை இது வெளியிடப்பட இருக்கும் நிலையில், அதற்கு முன்னரே அதன் உள்ளடக்கம் பிபிசிக்கு கிடைத்திருக்கிறது.
 
இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள சுற்றுச்சூழல் துறை, பிரிட்டனை பருவநிலை மாறுபாட்டு விளைவுகளில் இருந்து காக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :