கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கோடீஸ்வர் பில் கேட்ஸ்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 9 ஜூன் 2016 (15:38 IST)
உலகில் உள்ள ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கோழிகளை தானம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கோடீஸ்வரரும், கொடையாளருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
 
 
கோழிகளை வளர்த்து, விற்பதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், உலகில் உள்ள ஏழை குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவும் என பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், கோழிகள் நாளடைவில் தொடர்ந்து பெருகும் போது, அது நல்ல முதலீடாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
மேலும், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் கோழி வளர்ப்பு என்பது 5 சதவீதமாக உள்ளது. அதனை 30 சதவீதமாக உயர்த்த, வீட்டிலிருந்தபடியே கோழி வளர்ப்பு முறையை தான் பெரிய அளவில் ஊக்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
அவருடைய ஆராய்ச்சிகளின்படி, 10 கோழிகள் கொண்ட ஒரு மந்தை ஆண்டுக்கு 1,000 டாலர்கள் வரை ஒரு குடும்பத்திற்கு வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதில் மேலும் படிக்கவும் :