மனிதனுக்கு நிம்மதி அளிப்பது தூக்கம். இதனை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?

Webdunia|
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 12ஆம் இடம் சயன (உறக்கம்) ஸ்தானம். பழங்கால ஜோதிட நூல்களில் இதைப் பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக சுக்கிரன் 12இல் இருந்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறையில், ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற பெண்களுடன் அவர் உறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
சந்திரன் 12இல் இருந்தால் வாசனைத் திரவியங்கள் சூழ்ந்த அறையில், இலவம்பஞ்சணையில் அந்த ஜாதகர் உறங்குவார். அதேபோல் அவர் உண்ணும் உணவும் தரமிக்கதாகவே இருக்கும்.

பொதுவாக 12க்கு உரிய கிரகம் சிறப்பாக இருந்தாலும் படுத்த உடனே தூக்கம் வரும். ஒருவேளை 12இல் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகர் தனது கையை தலைக்கு கொடுத்து, காலைக் குறுக்கிக் கொண்டு உறங்குவார். நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது.
பொதுவாக ரயில்வே பாதைக்கு அருகேயுள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு இதுபோன்ற கிரக அமைப்பு பெரும்பாலும் காணப்படும். அவர்கள் உயர்ரக கட்டில், பஞ்சணையில் தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் வராது.

ராகு 12இல் இருந்தால் பாம்பு உள்ளிட்ட கொடிய ஊர்வனங்கள் உலாவக் கூடிய இடத்தில் அந்த ஜாதகர் உறங்க நேரிடும். மேலும் 6க்கு உரியவன் 12இல் இருந்து 12க்கு உரியவனுடன் சனி சேர்ந்தால் அந்த ஜாதகர் கொடிய பாம்புகள் சூழ்ந்த இடத்தில் அல்லது மரத்தில் தூங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குரு 12இல் மறைந்தால் அரசுக்கு சொந்தமான இடங்கள், கட்டிடங்கள், கோயில்களில் அந்த ஜாதகர் உறங்குவார்.


இதில் மேலும் படிக்கவும் :