ல‌ட்சு‌மி ம‌ந்‌திர‌ம் சொ‌ன்னா‌ல் செ‌ல்வ‌ம் பெருகுமா?

Webdunia|
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: லட்சுமியை மந்திரங்கள் சொல்லி வழிபட்டால் கோடீஸ்வரர் ஆகலாம் என்று சொல்கிறார்களே, இது எல்லோருக்கும் சாத்தியமான விஷமா?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கிரகங்களில் லட்சுமிக்கு உரிய கிரகமாக சுக்ரன் எ‌ன்று சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ரன் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வரலட்சுமி நோன்பு, விரதம் எல்லாம் சிரத்தையாக இருக்க முடியும்.
ஆனால் லட்சுமி என்பது அதுபோன்று கிடையாது. உழைப்பு மூலமாக வரக்கூடியதுதான் லட்சுமி. நாம் வெறுமனே மந்திரங்களை மட்டுமே சொல்லிவிட்டு, உதாரணத்திற்கு ஸ்ரீம் ஸ்ரீயே நமக போன்றது லட்சுமிக்குரிய மந்திரங்கள்தான். ஆனால் லட்சுமி உழைப்பு மூலமாக வரக்கூடியதுதான்.

லட்சுமியை வணங்கினால் ஊக்கம் உண்டாகும். அந்த ஊக்கம் உண்டாகும் போது உழைப்பும் உண்டாகும். உழைப்பு உண்டாகும் போது தனம் உண்டாகும். இதுதான் அதன் தாத்பரியம். அதனால் லட்சுமி மந்திரத்தைச் சொல்லிவிட்டால் தனம் வந்துவிடும் என்று பொருள் அல்ல. லட்சுமி ஊக்கத்தை தருபவள் என்பதுதான் முக்கியம்.


இதில் மேலும் படிக்கவும் :