ஜோதிடத்தில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னங்கள், சர லக்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக சர லக்னங்களுக்கு களத்திர தோஷம் உண்டு என பண்டைய ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த தோஷத்திற்கு, ‘உபய களத்திரம்’ என்ற வார்த்தையும் அந்த நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.