ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்துவிட்டால் தொடர்ந்து அந்தப் பணியை நீண்ட காலமாகச் செய்வார்கள். இப்ப ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திரன் உச்சமாகிறது, வலுவடைகிறது. கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன் ஆட்சி பெறுகிறது. இவர்களையெல்லாம் பார்த்தீர்களானால் ஏதாவது ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் வெவ்வேறு நிலைகளை அடைவார்கள். இவர்களுக்கு குறிக்கோளும் உருவாக்கமும் ஒன்றாகவே இருக்கும்.