தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடந்து முடியும்?

Webdunia|
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் சிறப்பாக நடக்கும். இரண்டு தேதியைச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்று 17, மற்றொன்று 19. 17ஆம் தேதி அன்று சனி பகவானுடைய ஆதிக்கத்தில் வருகிறது. ஆனால் அன்று செவ்வாய் நட்சத்திரம். மற்றொரு நாள் 19. இதில் 17ஆம் தேதி கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். ஆங்காங்கே சில சம்பவங்கள், சின்ன சின்ன வன்முறைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும், இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளுக்கு (தே.மு.தி.க., தி.மு.க.) கொஞ்சம் வாக்குகள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் வெற்றி வாய்ப்பு ஆளுங்கட்சிக்கு அதிகமாக உள்ளது. ஏனென்றால் ஜெயலலிதாவிற்கு குரு பலன்கள் எல்லாம் வலுவாக இருக்கிறது. 9இல் குரு இருப்பதால் வெற்றி முரசு கொட்டுவார்கள். இருந்தாலும், தி.மு.க.விற்கு கூடுதலான வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. முடிவு அ.தி.மு.க.விற்கு வெற்றியாக இருக்கும். தி.மு.க.விற்கு ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட கணிசமான அளவு அதிகமாகக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :