குரு மேஷத்தில் வருவதால் உழைக்காதவர்களையும் உழைக்க வைக்கும். அதற்கடுத்து, கீழ்த்தட்டு மக்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். தினக் கூலி அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்து, வேளாண் நிலங்கள் கொஞ்சம் செம்மையடைய வாய்ப்பு இருக்கிறது. கரம்பாக இருந்த நிலங்களும் மீண்டும் விளை நிலங்களாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.