உதாரணமாக கடக லக்னம், கடக ராசி (ஒரே லக்னம்+ராசி) போன்ற அமைப்பைப் பெற்றவர்கள் மிகவும் நாணயமாக நடந்து கொள்வார்கள். இவர்கள், “சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம்” என்ற கொள்கையை பின்பற்றுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள். எதிலும் ஸ்திரமான, வெளிப்படையான முடிவை எடுப்பார்கள்.