அ‌ண்ணா ஹசாரே போரா‌ட்ட‌ம் எ‌ங்கு போ‌ய் முடியு‌ம்?

Webdunia|
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அண்ணா ஹசாரே போராட்டம் காங்கிரசுக்கு தலைவலியாகியுள்ளது. இது எங்கே போய் முடியும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இது காங்கிரசுக்கு கடினமான நேர‌ம்தான். ஏனென்றால், கன்னியில் சனி வந்து உட்கார்ந்திருக்கிறார். இந்தக் கன்னி என்பது புதன் வீடு. இந்த புதன்தான் கேள்விகளை எழுப்பக்கூடிய ஒரு கிரகம். எது நடந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நான் கேள்வி கேட்பேன் என்பது போன்றது.
மேலும் ஜனநாயகத்திற்கு உரிய கிரகமும் புதன்தான். கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிய கிரகமும் புதன்தான். தூண்டல், துலங்கல் - அதாவது கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வதெல்லாம் புதன்தான் - அதைத்தான் அவர் செய்கிறார். அதனால், அண்ணா ஹசாரேயின் நடவடிக்கைகள் டிசம்பர் வரையில் மிகக் கடுமையாக இருக்கும். சனி பகவான் கன்னியில் இருக்கும் வரைக்கும்.
டிசம்பர் 21 சனிப்பெயர்ச்சி. அதன்பிறகு அண்ணா ஹசாரே போன்ற ஆட்களுக்கு ஆபத்துகளும் காத்துக்கிடக்கிறது. ஏனென்றால், துலாம் ராசிக்கு சனி மாறுகிறார். அந்த நேரத்தில் சில கலவரங்கள், கேள்வி கேட்போருக்கு சில ஆபத்துகள் போன்றெல்லாம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :