அவர் வெள்ளியங்கிரி மலைகளைக் காண நேர்ந்ததுமே புரிந்துபோனது, இதுதான் சதா கண்களுக்குள் இருக்கும் அந்த மலைகள் என்று. அது மட்டுமில்லை... தியானலிங்கம் அமைப்பதற்கான இடமும் இதுதான் என்பது புரிந்துபோனது. இடத்தின் உரிமையாளர்களை அதற்குமுன் அறிமுகம் கிடையாது.