மச்சமுனி சித்தர்

Webdunia|
FILE
பிரம்ம முகூர்த்தத்தில் அமர்ந்து நெற்றிப் பொட்டில் ஓங்காரத்தை நிறுத்தி ஓம் என்று 108 முறை சொல்லி வந்தால் - ஓங்கார இடைவெளி 108 ஆகும். சிந்தனை அற்ற இந்த இடைவெளியை அதிகரித்தால் இந்த இடைவெளி வெட்ட வெளியில் சித்தம் சிவனாகும். சித்தம் பிரபஞ்சமாகும். இடைவெளியை இட்டு நிரப்ப பிரபஞ்சம் காத்திருக்கிறது. இருந்த இடத்தில் இருந்து ஆகாய கங்கையையும் கொண்டு வரலாம்.
வேதாந்த ரகசியம் வெட்டவெளி பொட்டலிலே!

FILE
சதுரகிரி மலையில் வெட்ட வெளி பொட்டல் மூன்று இடங்களில் உள்ளது. அமாவாசை, பெளர்ணமி திதிகளில் அங்கு சென்றால் நம்முன் உள்ள பிரபஞ்சத்தை உணரலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது. என உணரலாம்.
திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ஊற்றில் உள்ள மீன்கள் சதாசர்வகாலமும் ஓங்காரத்தை உச்சரித்துக் கொண்டே உள்ளன. அதன் இதழ்களை கவனித்தால் இது புரியும்.

பரங்குன்றம் மலை மீதுள்ள சி‌க்கந்தர் தர்காவில் சி‌க்கந்தரை தரிசித்து விட்டு காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வாருங்கள். இங்குள்ள லிங்கத்தில் மச்சமுனி ஜீவன் உள்ளது. இன்றும் தேவர்களும், சித்தர்களும் பெளர்ணமி, அமாவாசை இரவுகளில் இவரைத் தரிசிக்க வருகின்றார்கள்.
ஈஸ்வரநாளில் சனிக்கிழமைகளில் 9 வாரம் 9 முறை லிங்கத்தை வலம் வந்து லிங்கம் முன் அமர்ந்து 108 முறை ஓங்காரம் தியானித்து வர மனித நேயம் ஏற்படும்.

கணவன் மனைவி, குழந்தை, பெற்றோர், முதலாளி, தொழிலாளி, பங்காளி, உறவுகள் மேம்படும். கிரகங்களுடன் உறவுகள் வலுப்படும். கிரக தோஷங்கள் நீங்கும். லோக வாழ்வில் பேரானந்தம் கிட்டும்.
ஆடி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் பாண்டியநாட்டு மன்னராக பிறந்தார். நல்லாட்சி புரிந்து சிவனின் அருளால் ஞான மார்க்கத்திலும் வந்தார். போகர் காகப்பூஜண்டர் நந்தியிடம் சீடராக இருந்தார்.

மச்சமுனி கடைக்காண்டம், கலைஞானம், நிகண்டு, முப்பு, தீட்சை, திராவகம் வைத்தியம், பெருநூல் காவியம், சரக்கு சைப்பு, வாகர யோகம் காரணஞானம், சூத்திரம் போன்ற நூல்களை எழுதினார். மாயாஜாலங்களைப் பற்றிய மாயாஜால காண்டம் என்னும் நூலையும் இயற்றினார்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :