பலவீனங்களின் அடிமையா நீங்கள்?

Webdunia|
FILE
சமீபத்தில் "உலக புகையிலை ஒழிப்பு தினம்" நம்மை கடந்து சென்றது... ஒவ்வொரு வருடமும் நம்மை கடந்து செல்கிறது... ஆனாலும் இந்த பிரச்சனையுடைய தீவிரம் நம்மை தொடுவதில்லை. இது போன்ற நாட்கள் வெறும் சடஙகுகளாகவே நம்மை கடந்து செல்கின்றன...

இதில் நம்முடைய பங்களிப்பு என்ன?

புகை பழக்கம் போன்ற நம்மிடம் உள்ள பலவீனங்களை எப்படி கையாள்வது என்று சத்குரு பேசுகிறார்

கேள்வியாளர்: சத்குரு என்னிடம் புகை பிடிப்பது, கோபப்படுவது போன்ற எனக்கே கூட பிடிக்காத சில பலவீனங்கள் இருக்கின்றன. நான் விரும்பாவிட்டாலும், அவை என்னிடம் இருக்கின்றன. அவற்றை நிறுத்துவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சத்குரு: 'எனக்கு இது வேண்டாம்' என்று அதிகமாக சொல்லச் சொல்ல, அது உங்கள் மனதுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. பிறகு அதே உங்கள் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது, இல்லையா?

ஒரு பரிசோதனையாக, அடுத்த 10 விநாடிகளுக்கு நீங்கள் குரங்கைப் பற்றி நினைக்கவே கூடாது, சரியா? ம், முயற்சித்துப் பாருங்கள்... உங்கள் மனதில் குரங்குதான் முழுமையாக உட்கார்ந்திருக்கிறது, இல்லையா? இதுதான் மனதின் குணம்.
இப்படிப்பட்ட மனதை வைத்துக் கொண்டு, ஒரே நோக்கோடு உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே மனதின் செயல்பாட்டைப் புரிந்து கொண்டு, பிறகு இந்த மனதை வைத்து என்ன செய்வது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

மக்கள் என்னிடம் வந்து, 'நான் புகை பிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறேன், அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அதற்கு நான் சொல்வேன், "நீங்கள் எதற்காக புகை பிடிக்க வேண்டும்? உங்கள் உடல் புகைவிடும் இயந்திரம் அல்ல. வாகனங்கள் புகை விடும். ஆனால் உங்கள் உடல் புகை விடாது. புகை பிடிக்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால், புகை பிடிக்க வேண்டாம், அவ்வளவுதானே?" என்பேன்.

அதற்கு அவர்கள் சொல்வார்கள், "இல்லையில்லை. எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது, அதை விட்டுவிட முயற்சிக்கிறேன், ஆனால் பலன் இல்லை".
இது புகை பிடிப்பது அல்லது புகைக்காமல் இருப்பது பற்றிய கேள்வி அல்ல.
ஒரு நாள் ஒரு மனிதர், தன் பக்கத்து வீட்டுத் தோழியுடன் காரில் வெகுதூரம் சென்று, வண்டியை நிறுத்திவிட்டு, திடீரென்று தன் தோழியைக் கட்டிப்பிடிக்க முயற்சித்தார்.

அதற்கு அவருடைய தோழி, "முட்டாளே! என்ன செய்கிறாய்? நீ ஒழுக்கமானவன் என்று நினைத்துதானே உன்னுடன் வந்தேன், இதென்ன பைத்தியக்காரத்தனம்?" என்றார். அதற்கு அந்த மனிதர், "இல்லை. நான் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்" என்றாராம்.
எதையாவது கட்டாயத்தின் பேரில் நிறுத்திவிட்டால், இப்படித்தான் அது வேறொரு வடிவத்தில் வெளிப்பட்டுவிடும்.

இப்போது நீங்கள் புகை பிடிப்பதன் மூலம் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் சோர்வாக உணரும்போது சிகரெட்டில் இருக்கும் நிகோடின் (nicotine) என்ற ரசாயனப் பொருளின் மூலம் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீர்கள் அல்லது முழுமையற்று இருப்பதாக மனதளவில் உங்களை உணர்வதால் இப்போது ஒரு சிகரெட்டை கையில் வைத்துக் கொள்கிறீர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :