நீங்களும் புத்தராய் மலருங்கள்!

FILE

ஆன்மீகப் பாதையில் நடையிடத் தொடங்கும் ஒவ்வொரு மனிதருக்கும் புத்த பூர்ணிமா நாள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், 2500 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நாளில்தான் மிகப் பெரிய அற்புதம் நடந்தது. புத்தர் ஞானம் பெற்றார்.

அதன் பின்னர் இந்த உலகம் அதே நிலையில் இல்லை. அவர் இந்த உலகில் மாற்ற முடியாத பதிவை ஏற்படுத்திச் சென்றார். அவரது ஆழ்ந்த அமைதியால் உலகில் மிகப் பெரும் மாற்றத்தை நிரந்தரமாய் ஏற்படுத்தினார்.

Webdunia|
இதோ இந்த மாதத்தில் வருகிறது புத்த பூர்ணிமா!
உலகின் ஆன்மீகப் பாதையில் அவர் கொண்டு வந்த மாற்றம், மனிதனின் தேடலில் ஒரு வித்தியாசத்தையும் தரத்தையும் ஏற்படுத்தியது. ஆன்மீகப் பாதையில் வளரும் யாரும் புத்தரைப் புறக்கணிக்க முடியாது. அந்த அளவு அவரது இருப்பு ஆழ்ந்த தாக்கத்தை உலகத்தில் உருவாக்கி உள்ளது!


இதில் மேலும் படிக்கவும் :