தியானலிங்கம்: வெளிச்சம் வருகிறது - 5

- பட்டுக்கோட்டை பிரபாகர்

WD
தியானத் தூண் அல்லது தியானக் கட்டிடம் என்று பலவிதமான வடிவங்களில் அமைத்திருக்க வாய்ப்பிருக்கும்போது, சத்குரு எதற்காக தியானலிங்கம் என்கிற இந்த சக்திப் பெட்டகத்தை, லிங்க வடிவில் அமைக்க வேண்டும்?

லிங்கம் என்றாலே சமஸ்கிருதத்தில் வடிவம் என்றுதான் பொருள். லிங்கம் என்பது உருவம், அருவம் இரண்டும் சேர்ந்த அருவுருவம்.

நாம் சிவா என்றும் சக்தி என்றும் இறைவனை அழைக்கிறோம். இது வாழ்வின் இருமை நிலையைக் குறிப்பதாகும். புலனறிவு கொண்டு இந்தப் பூமியில் வாழும்போது... நமது உணர்ச்சிகளின் மூலமே வாழ்வை உணரும்போது... இந்த வாழ்க்கையின் எல்லா அனுபவங்களுமே, குறிப்பிட்ட இருமை நிலையிலேயே இருக்கின்றன.

மரபு வழியில் சிவா மற்றும் சக்தியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இருமை நிலையை யோக மார்க்கத்தில் ஈடா, பிங்களா என்கிறார்கள். கிழக்கத்தியக் கலாச்சாரங்களில் யின், யங் என்று குறிப்பிடப்படும் இந்த இருமை நிலையை எளிமையாகக் குறிப்பிட வேண்டுமென்றால், ஆண்தன்மை, பெண்தன்மை என்று சொல்லலாம். அல்லது காரண அறிவு மற்றும் உள்ளுணர்வு என்றும் குறிப்பிடலாம். இந்த இரண்டு தன்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் எல்லா மதங்களும் வளர்ந்திருக்கின்றன.

இந்த இரண்டு தன்மைகளையும் முழுமையாகக் கொண்ட, லிங்க வடிவம் என்பது சக்தி வாய்ந்த வடிவம். இந்த வடிவத்தில்தான் சக்தியை நீண்ட காலத்துக்கு நிலைநிறுத்தி வைக்க இயலும். மற்ற வடிவங்களில் சில காலத்துக்குப் பிறகு, சக்தி வலுவிழந்துவிடும். விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட சில கோளங்களின் புகைப்படங்களைக் கவனித்துப்பார்த்தால், அவற்றின் அடிப்படை வடிவம் லிங்க வடிவத்தில் இருப்பதைப் பார்க்கலாம்.

அணுமின் நிலையங்களில் அணுசக்தி கொள்கலன்களைப் பாருங்கள். அவை லிங்க வடிவில் இருக்கின்றன. விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், வெடித்துச் சிதறும் பட்டாசு, கேப்ஸ்யூல் வடிவத்தில் இருக்கும் உயிர்காக்கும் மருந்துகள்... இவற்றைக் கவனித்தால் பெரும்பாலும் சக்தி, லிங்க வடிவத்துக்குள் வலுவாக இருப்பதை உணர முடியும்.
WD

லிங்கவடிவம் இந்துக்களுக்கு மட்டுமே புனிதம் என்றில்லை. இந்துக்கள் அதிகம் இல்லாத ஆப்பிரிக்கா, கிரீஸ், கம்போடியா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆகிய நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே லிங்க வடிவம் புனிதமாகக் கருதப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு.

‘ராஜா’ என்ற பெயரை எடுத்துக்கொள்வோம். இந்தப் பெயருக்கு ஏதாவது மத அடையாளம் சொல்ல முடியுமா? ராஜா தம்பி என்று ஒரு இந்து வைத்துக் கொள்கிறார். ராஜா ஃபாதர் என்று ஒரு கிறிஸ்தவர் வைத்துக்கொள்கிறார். ராஜா முகம்மது என்று ஒரு இஸ்லாமியரும் வைத்துக் கொள்கிறாரே.

தண்ணீர் உறைந்தால், பனிக்கட்டி. எல்லோருக்கும் தெரியும். பனிக்கட்டியை எந்த உருவத்திலும் அமைத்தல் சாத்தியம்தானே? பனிக்கட்டியில் பிள்ளையார் உருவம் அமைத்து திருமண விழாக்களில் வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதே பனிக்கட்டியை மேரி மாதாவாகவும் உருவாக்க இயலும்தானே. பிள்ளையார் பனிக்கட்டியை வைத்து, தண்ணீர் என்பதே இந்து மதத்தைச் சேர்ந்தது என்று முடிவுக்கு வர முடியுமா?

Webdunia|
ஐந்து!
இதேபோலத்தான் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும். எந்த நாட்டவர், எந்த இனத்தவர், எந்த மொழி பேசுபவர் அதைக் கண்டுபிடித்திருந்தாலும்... பிறகு அந்தக் கண்டுபிடிப்பு உலகம் முழுவதற்கும் சொந்தமாகிறது. மின்சாரத்துக்கு மதம் உண்டா என்ன? அறிவியல் உண்மைகள் எப்படி அனைவருக்கும் பொதுவானதோ... அப்படி ஆன்மீக உண்மையாம் லிங்க வடிவமும், எல்லா மதத்தினருக்கும் பொதுவானது.


இதில் மேலும் படிக்கவும் :